'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
விஜய் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமர்ஷியல் கண்டண்ட் இருந்தாலுமே கதை சொல்லும் விதம் குவாலிட்டியாக இருப்பதால், பேமிலி ஆடியன்ஸ் தாண்டி, பல இளைஞர்கள் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவி புதிய சீரியலின் படப்பிடிப்பை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 'சிப்பிக்குள் முத்து' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் யார் நடிக்கிறார்? கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல்களை விஜய் டிவி சீக்ரெட்டாக வைத்துள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான 'வைதேகி காத்திருந்தாள்' தொடர் எதிர்பாரதவிதமாக முடித்து வைக்கப்பட்டது. எனவே, அந்த ஸ்லாட்டில் இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.