2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களது வீடுகளில் நாய், பூனை ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர். அடிக்கடி அவற்றுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.
தெலுங்கில் இளம் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற நடிகரான விஜய் தேவரகொன்டா அவரது செல்ல நாயுடன் விமானத்தில் பயணித்த வீடியோ ஒன்றை நேற்று பதிவிட்டுள்ளார். விஜய், அவரது தம்பி ஆனந்த், நாய் ஸ்டார்ம் ஆகியோர் விமானத்தில் பயணித்த போடு எடுத்த அந்த வீடியோவில் விஜய்யுடன் ஸ்டார்ம் கை குலுக்குவதும், ஹை-பை சொல்வதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “இந்த ஜென்டில்மேனின் முதல் விமானப் பயணம்' என விஜய் குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சங்கராந்தி தினத்தன்று கூட “எனது அன்பாவனவர்கள், ஹேப்பி ஹேப்பி ஹேப்பி சங்கராந்தி” என்று அவர் பதிவிட்டு வெளியிட்ட குடும்பப் புகைப்படப் போட்டோவில் நாய் ஸ்டார்ம் கூட இடம் பெற்றுள்ளது. தன் செல்ல நாயை தன் குடும்பத்தில் ஒருவராக நேசிக்கிறார் விஜய் தேவரகொன்டா.