பிளாஷ்பேக்: “முதல்வனை” தவறவிட்ட மூன்று முன்னணி நாயகர்கள் | பெங்களூருவில் ‛எம்புரான்' படத்திற்காக விடுமுறை அளித்து சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்த கல்லூரி | சபாபதி, சந்திரமுகி, கல்கி 2898 ஏடி- ஞாயிறு திரைப்படங்கள் | டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் |
நடிகர் விஜய் தேவரகொண்டா தென்னிந்திய அளவில் அதிகம் இளைஞர்களால் விரும்பப்படும் இளம் நடிகர். தெலுங்கில் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்துவிடும் விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க வந்தார். இடையே ஷாஹிபா என்கிற ஒரு வீடியோ ஆல்பம் ஒன்றில் நடித்திருந்த அவர் அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தபோது அங்கிருந்த அரங்கின் படிக்கட்டில் இறங்கிய போது கால் ஸ்லிப் ஆகி தவறி விழுந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.
அதே சமயம் இந்த வீடியோவை தற்போது தனக்கான விளம்பரமாக மாற்றிக் கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. அப்படி தான் விழுவது போன்ற வீடியோவை எடிட் செய்து தான் படிகளில் கீழே விழுந்ததும் அப்படியே ஒரு படுக்கையில் லாலிபாப் சாப்பிட்டுக் கொண்டே போய் விழுவது போல இணைத்து புது வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
மேலும் ரசிகர்கள் அவரை செல்லமாக ரவுடி என்று அழைப்பது வழக்கம். இந்த வீடியோவை வெளியிட்டு, “நான் கீழே விழுந்தது மிகப்பெரிய காமெடியாக போய்விட்டது. ஆனால் ரவுடியின் வாழ்க்கை என்றாலே இதெல்லாம் சகஜம் தானே.. ரவுடிகள் எல்லா பக்கமும் எப்போது என்று தெரியாமல் ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். ரவுடி வாழ்க்கையில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது தான்” என்று சமாளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.