'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் |

தெலுங்கு சினிமாவில் 'கப்பர் சிங், டி.ஜே, மிஸ்டர் பச்சான்' போன்ற மாஸ் மசாலா படங்களை இயக்கி பெயர் பெற்றவர் ஹரிஷ் ஷங்கர். தற்போது இவர் பவன் கல்யாணை வைத்து 'உஸ்தாத் பகத் சிங்' படத்தை இயக்கி வருகிறார்.
இதையடுத்து ஹரிஷ் ஷங்கர் தில் ராஜூ தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்திற்கு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. பெரும்பாலும் விஜய் தேவரகொண்டா கதை களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடிப்பார். ஆனால், இந்த முறை முழு நீள ஆக்சன் மசாலா படத்தில் இறங்கி நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.