வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
நடிகை திரிஷா படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஓய்வு நேரங்களில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். செல்லப்பிராணிகளுடன் இருக்கும்படியான வீடியோக்கள், புகைப்படங்களை அதிகமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவருக்கு இவற்றின்மீது மிகப்பெரிய அளவில் பிரியம் காணப்படுகிறது. தெரு நாய்களை தத்தெடுக்க எப்போதும் தனது ரசிகர்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார்.
இதற்கிடையே ஜோரோ எனும் நாய் செல்லமாக வளர்த்து வந்தார். அவற்றுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று (டிச.,25) அதிகாலையில் அந்நாய் திடீரென இறந்துள்ளது. இதனை வருத்தத்துடன் தெரிவித்துள்ள திரிஷா, 'எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நானும், எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிதுகாலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.