அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் ஷங்கர் தமிழில் பல பிரமாண்டமான படங்களை இயக்கியவர். தற்போது தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஜன., 10ல் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தென்னிந்தியாவில் பல உச்ச நடிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்போது கேம் சேஞ்சர் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷங்கர் கூறியதாவது, "தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆன சிரஞ்சீவியை வைத்து படம் இயக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக கனவு கண்டேன். ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. அதேபோல் கொரோனா காலகட்டத்தில் பிரபாஸிடம் ஒரு கதை ஒன்று கூறினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் நிறைவேறவில்லை" என தெரிவித்துள்ளார்.