'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆதிக் ரவிச்சந்திரன் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து 'குட் பேட் அக்லி' எனும் படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. அஜித் படத்தை முடித்ததும் மீண்டும் விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் ஆதிக். இதையடுத்து மீண்டும் ஒரு படம் இணைந்து பணியாற்றலாம் என ஆதிக்கை அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம். அதற்குள் அஜித்தும் ரேஸை முடித்து சிவா அல்லது வெங்கட் பிரபு ஆகியோரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விடுவார். இதன்பின் ஆதிக் படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.