அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
விஜய் டிவியில் பள்ளி கால நினைவுகளை பொக்கிஷமாக பதிவு செய்த தொடர் கனா காணும் காலங்கள். பள்ளி முதல் கல்லூரி வரை பல சீசன்களாக வெளியாக சூப்பர் ஹிட் ஆனது. விஜய் டிவிக்கு இளைஞர் பட்டாளத்தை ரசிகர்களாக மாற்றி பெருமை கனா காணும் காலங்கள் தொடருக்கு உண்டு. சமீபத்தில் கனா காணும் காலங்கள் தொடர் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் தயாரிக்கப்படு வருவதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இம்முறை இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதன் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் வீஜே சங்கீதா, ப்ரணிகா உட்பட பல புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ளனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த புரோமோ 3 நாட்களில் 2.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அந்த புரோமோவின் இறுதியில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கனா காணும் காலங்கள் தொடரை பார்க்க விரும்பும் நேயர்கள் விஜய் டிவியில் பார்க்க முடியாது, ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் தான் பார்க்க முடியும். இதனால் தொலைக்காட்சி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக ஓடிடி செல்லும் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.