தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். சினிமாவில் சரிவர வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் இவர் நடித்து வரும் 'இரட்டை ரோஜா' தொடர் 644 எபிசோடுகளை கடந்துள்ளது. தற்போது சீரியலில் செட்டில் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினி, தற்போது புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். சாந்தினி 'செல்லம்மா' என்று பெயரிடப்பட்டுள்ள விஜய் டிவி தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.