குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன்பின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 15 க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே சீரியல் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக் கிளி தொடரில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா, அதிலிருந்து திடீரென விலகினார். அதன்பின் சில காலத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இது அவரது இரண்டாவது குழந்தை என்பதுடன், 12 ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களுக்கு அதிதி என்ற மகள் உள்ளார். ரசிகர்கள் பலரும் மிகுந்த அக்கறையோடு தாய், சேய் நலத்தை விசாரித்து வருகிறார்கள். மேலும், பிரபலங்களும், ரசிகர்களும் நீலிமாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.