இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி வெளியான படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படம் தற்போது 850 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இப்படம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 31ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் படம் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியாகும்.
படம் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால் படத்தின் தியேட்டர் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கன்னடம் தவிர மற்ற மொழிகளில் இப்படத்திற்கான தியேட்டர் வசூல் குறைந்துவிட்டது. தீபாவளி படங்களுக்கு மத்தியிலும் இப்படம் ஓடியது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இப்படம் 1000 கோடி வசூல் சாதனை புரிய வேண்டும் என்றால் இன்னும் 150 கோடி தேவைப்படும். ஆனால், ஓடிடியில் வெளியான பிறகு அது நடக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இந்த 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைத் தக்க வைத்துள்ள கொள்ள வாய்ப்புகள் அதிகம்.