மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் முக்கிய நடிகர்கள் சீரியலை விட்டு விலகியுள்ள புதுப்புது பிரபலங்களை எண்ட்ரி கொடுத்து வருகின்றனர்.
விஜய் டிவியின் நம்பர் 1 தொடரான பாரதி கண்ணம்மா 645 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடரின் கதாநாயகி கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினியும், வில்லி வெண்பாவாக நடித்து வந்த ஃபரீனாவும் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலை விட்டு விலகியுள்ளனர். சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இந்த இருநடிகர்களும் விலகியுள்ளது சீரியலுக்கு பின்னடைவை தரும் என பலரும் கருதி வருகின்றனர். இந்நிலையில் தொடரின் சுவாரசியம் குறையாத வகையில் சீரியல் குழு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார். மேலும் வில்லி கதாபாத்திரத்திற்கு பதிலாக வில்லன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரபல விஜேயும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளருமான விஜே அர்ச்சனா பாரதி கண்ணம்மா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.