இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகை ஆல்யா மானசா இரண்பாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவரது கணவர் சஞ்சீவ் தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமான ஜோடி ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த தம்பதியினருக்கு அய்லா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே தனக்கு அய்லா மாதிரியே இன்னொரு அழகிய லைலா பாப்பா வேண்டும் என சஞ்சீவ் ஆலியாவிடம் ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமீபத்தில் வைரலானது. சஞ்சீவின் அந்த ஆசைப்படியே ஆல்யா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகவுள்ளார். இந்த சந்தோஷமான செய்தியை அவரது கணவர் சஞ்சீவ் சோஷியல் மீடியா லைவ்வில் வந்த போது பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து சஞ்சீவ் ஆல்யா இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் ராஜா ராணி 2 தற்போது விறுவிறுப்புடன் சென்று கொண்டிருப்பதால் கர்ப்பத்தின் காரணமாக ஆல்யா தொடரிலிருந்து விலகுவாரா எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.