போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சியில் டைகர் கார்டன் தங்கதுரையாக உள்ளே நுழைந்து இன்றைக்கு பழைய ஜோக் தங்கதுரை என அடையாளம் காணப்படும் அளவுக்கு வளர்ந்துள்ள தங்கதுரை, சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை போட்டியை இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை கவர்ந்தது.
அந்தவகையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தங்கதுரை. நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வரவழைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர் இயக்குனர் பாண்டிராஜும், படக்குழுவினரும். இந்த நிகழ்வின்போது சூர்யா அங்கு இல்லையே என்பது மட்டும் தான் தங்கத்துரையின் மனக்குறையாம்.