ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தொகுப்பாளினியாக களமிறங்கிய ஐஸ்வர்யா, சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு சிவாகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி பிரபலமானார். தொடந்து வீஜே, சீரியல் நடிகை என சிறகடிந்த பறந்த ஐஸ்வர்யாவை தேவதையாக நினைத்து சுற்றி வந்த ரசிகர் கூட்டம் ஏராளம்.
இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் திரையில் தோன்றாவிட்டாலும் சோஷியல் மீடியாக்களில் தன் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் தெரிவித்திருந்த அவர், தற்போது மற்ற சீரியல் நடிகைகள் போலவே போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது கர்ப்பமான வயிற்றில் பூமி போன்ற பெயிண்டிங் வரைந்து, மேலே ஒருபுறம் சந்திரனையும் மறுபுறம் சூரியனையும் வைத்து, உடல் முழுவதும் செடி கொடிகளை சுற்றிக் கொண்டு 'இயற்கை தாய்' என்பதை குறிப்பாக காட்டும் வகையில் போட்டோ எடுத்துள்ளார்.
வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டீசன்கள் ஐஸ்வர்யாவின் கலை ஆர்வத்தை கலாய்ப்பதா அல்லது குழந்தைக்காக வாழ்த்துகள் சொல்வதா என்ற தெரியாமல் குழப்பத்துடன் சுற்றி வருகின்றனர்.