போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆஷிகா படுகோன் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார். நிஹாரிகா, த்ரிவேணி சங்கமம், கதலோ ராஜகுமாரி ஆகிய ஹிட் சீரியலில் நடித்து வந்த ஆஷிகா தமிழில் தமிழ்ச்செல்வி தொடரின் மூலம் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றாலும் 247-வது எபிசோடிலேயே தொடர் முடிவுற்றது.
இதற்கிடையில் ஆஷிகா படுகோனும் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலின் பாதியிலேயே வெளியேறினார். எனினும் தமிழில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை இந்த தொடரில் நடித்ததன் மூலம் உருவாக்கி கொண்டார். இந்நிலையில் ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி குமார் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஆஷிகா படுகோன் - சேட்டன் ஷெட்டி குமார் தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.