ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

காதலித்து, திருமணம் செய்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டார் நடிகை சமந்தா. இவர்கள் பிரிவுக்கு சமந்தா குழந்தை பெற விரும்பாததே முக்கிய காரணம் என செய்தி பரவியது. அதை சமந்தா மறுத்தும் இருந்தார். மேலும் எந்த ஒரு தம்பதியர் விவகாரத்து என்று அறிவித்தால் உடனே தவறுகள் அனைத்தும் பெண்கள் செய்ததாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள சாகுந்தலம் படத்தை தயாரித்துள்ள நீலிமா குணா ஒரு பேட்டியில், ‛‛என் தந்தை குணசேகர் இந்த கதையை சமந்தாவிடம் கூறியபோது அவருக்கு கதை பிடித்து இருந்தது. ஆகஸ்ட்டிற்குள் படத்தை முடிக்கும்படியும், அதன்பின் அவர் குழந்தை பெற விரும்புவதாகவும் சொன்னார் என தெரிவித்துள்ளார்.




