50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த சனியன்று வெளியான திரைப்படம்'டாக்டர்'. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
நேற்று முன் தினம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றூள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான இப்படம் கொரோனா நேரத்தில் பல்வேறு சிக்கலை சந்தித்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியாகும் என பல வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.




