டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சூர்யா தயாரிப்பில் சில நாட்களுக்கு முன் ஓடிடியில் வெளியான படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான இந்த படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்தது.
இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி, விமர்சகர்கள் கதைத் திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே இந்த விஷயம் சூர்யாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் கடும் கோபத்துக்கு ஆளான சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து எச்சரித்துள்ளார்.
அதோடு மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார். ஒரு கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும், தானாக முன் வந்து நஷ்ட ஈடு கொடுப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்கிறார்கள்.