10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது |
பொதுவாக வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்து ஓரளவுக்கு நிலையான மார்க்கெட்டை பிடித்த பிறகு தாங்களும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரிப்பது வழக்கம். ஆனால் மலையாள திரையுலகில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள, வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷேன் நிகம் என்பவர் தற்போது தனது தாயை தயாரிப்பாளராக்கி தயாரிப்பு நிறுவனம் துவங்கி பூதகாலம் என்கிற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் இவர் ஹீரோவாக நடிப்பதுடன் முதன்முறையாக இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என்கிற புதிய அவதாரங்களையும் எடுத்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது ஷேன் நிகம்மின் அம்மாவாக ரேவதி நடிக்கிறார்.
இந்த ஷேன் நிகம் தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற படத்தில் நடித்தபோது அதன் தயாரிப்பாளரை அதிக சம்பளம் கேட்டு பாடாய் படுத்தியவர். அதன்பிறகு அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டு நிலைமை சீரியஸான பின் ஒருவழியாக மன்னிப்புக் கேட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த சர்ச்சையால் விக்ரமின் கோப்ரா மற்றும் சீனு ராமசாமியின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதனாலோ என்னவோ தன்னை வைத்து படம் தயாரிக்க தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்க வேண்டும் என நினைத்து அதற்கு தனது தாயை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளார் ஷேன் நிகம்.