ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் |

கடந்த 30 வருடங்களாக மலையாள திரையுலகில் ஆக்சன் பட இயக்குனராக வலம் வந்தவர் ஷாஜி கைலாஷ். மலையாளத்தில் உள்ள அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியுள்ளார். ஆனால் சமீப காலமாக தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்த ஷாஜி கைலாஷ் கிட்டத்தட்ட 7 வருடங்களாக மலையாள திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். கடந்த வருடம் பிரித்விராஜுடன் நடிப்பில் கடுவா என்கிற படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்றது.
இந்தநிலையில் மோகன்லாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ஷாஜி கைலாஷ். தற்போது படத்திற்கு அலோன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது. இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார் மோகன்லால் இதற்கு முன்னதாக பாபா கல்யாணி, நாட்டுராஜாவு, ஆறாம் தம்புரான் என மோகன்லாலுக்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஷாஜி கைலாஷ், ரெட் சில்லீஸ் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட .12 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலை இயக்குகிறார்.




