'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல நட்சத்திர ஜோடியான சமந்தா - நாகசைதன்யா இருவரின் காதல் திருமணம் நான்கு வருடங்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருக்குமே அதிர்ச்சியான செய்தி தான். அதைவிட நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா பிரபல நடிகர். அவர்களது குடும்பமே பாரம்பரிய சினிமா குடும்பம். ஆனாலும் நாகசைதன்யாவின் திருமண முறிவு குறித்து அவரது தந்தை நாகார்ஜுனா கூறும்போது, இது துரதிஷ்டவசமான ஒன்று, அதேசமயம் இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது மகளின் திருமணம் முறிவு எதிர்பார்க்காத ஒன்று என்றும் அது குறித்து கேள்விப்பட்டதும் தனது மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்ததாகவும் ஆனால் தனது மகள் சமந்தா தனது தரப்பு விளக்கங்களை கூறி தன்னை கன்வின்ஸ் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் சமந்தாவின் தந்தை.