போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மூலமாக பிரபலமான நடிகர் கவின், அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதலில் விழுந்து இன்னும் அதிக அளவில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஓரளவு அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அவர் நடித்த லிப்ட் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரபல நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து நடத்திவரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கவிருக்கிறாராம் அறிமுக இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் கவினுக்கு நிச்சயமாக மிகப்பெரிய ஹிட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.




