காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? |
சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே டிவி, இணையதளம், சமூக வலைத்தளம், யு டியூப் என சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தில் தனித்துவமான இமேஜுடன் தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வரராவ். அவர் மீதும் அவருடைய படங்கள் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ள பலருக்கும் அவர்களது முதல் திருமணம் வெற்றிகரமாக அமையாமல் விவாகரத்தில் முடிந்தது அதிர்ச்சி கலந்த உண்மை.
நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜுனா, பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமியை முதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா மீது காதல் வந்ததும் லட்சுமியை விவகாரத்து செய்துவிட்டார்.
நாகார்ஜுனா, லட்சுமி தம்பதியினரின் மூத்தமகன் தான் நாக சைதன்யா. நடிகை சமந்தாவைக் காதலித்து மணம் புரிந்து அவரை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
நாகார்ஜுனா, அமலா தம்பதியினரின் மகன் அகில். இவருக்கும் ஷ்ரியா பூபால் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் அதை ரத்து செய்துவிட்டனர்.
நாகார்ஜுனாவின் சகோதரி மகன் நடிகர் சுமந்த். இவருக்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இரண்டு வருடத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.
சுமந்த் சகோதரி சுப்ரியா. இவருக்கும், 'இஷ்டம்' என்ற தெலுங்குப் படத்தில் நாயகனாக அறிமுகமான சரண் டோட்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். சரண் டோட்லா பத்து வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.
இப்படி அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது குறித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் தகவல்களைப் பகிர்ந்து இதெல்லாம் ஏதோ சாபத்தில் நடப்பதாக வருத்தப்பட்டுள்ளனர்.