பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
'பாகுபலி' படத்தின் மூலம் பான்-இந்தியா நடிகராக உயர்ந்துள்ளவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தற்போது 'சலார், ஆதிபுருஷ்' என்ற இரண்டு பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு 'மகாநடி' இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளார்.
அதற்கடுத்து அவர் நடிக்க உள்ள 25வது படத்தின் அறிவிப்பு அக்டோபர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் கதை எழுதி வருகிறாராம். அடுத்தடுத்து சில படங்களை பிரபாஸ் நடிக்க ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தை ஆரம்பிப்பது தள்ளிப் போனது என்கிறார்கள்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தை ஹிந்தியில் 'கபீர் சிங்' என் ரீமேக் செய்து அங்கும் பெரிய வெற்றி பெற்றவர் சந்தீப். தற்போது 'அனிமல்' என்ற ரன்பீர் கபூர் நடிக்கும் ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸின் 25வது படத்தில் சந்தீப் இணைந்தால் அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.