இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
கவுதம் மேனன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். உடல் எடையை குறைத்த வித்யூலேகா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து சமீபத்தில் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார். அப்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை அவர் தமது சமூக பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலிருந்து நெகட்டிவ் கமெண்டுகள் வர தொடங்கின. இந்த நிலையில் இது தொடர்பாக கொந்தளித்து ஒரு பதிவிட்டிருக்கிறார் வித்யூலேகா.
அந்த பதிவில், “நான் நீச்சல் உடையிலான புகைப்படத்தை பகிர்ந்ததற்காக இத்தனை நெகட்டிவ் கமெண்ட்டுகள்? அதிலும் சில மெசேஜ்களை பார்க்கவேண்டுமே? “உங்களுடைய விவாகரத்து எப்போ?”.. என்கிற அளவுவரை கேட்டிருக்கிறார்கள்.
1920-ஐ சேர்ந்த ஆன்ட்டிஸ் மற்றும் அங்கிள்கள் 2021-க்கு வாருங்கள். நெகட்டிவ் கமெண்டுகளில் இல்லை பிரச்சனை. நம்முடைய சமூக சிந்தனையில் தான் சிக்கல். ஒரு பெண் அணியும் உடையை வைத்து அவருடைய விவாகரத்தை தீர்மானிக்க முடியுமா? அப்படி என்றால் முழுமையாக இழுத்துப்போர்த்தி ஆடை அணிந்து இருக்கும் பெண்கள் எல்லாம் தங்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?” என்று கோபமாக கொந்தளித்து தன்னுடைய பதிவில் கேட்டிருக்கிறார்.