டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடிக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா மும்பையில் வசித்து வருகிறார். நேற்று வாரணாசியில் கங்கையில் நடந்த கங்கை ஆரத்தி நிகழ்வில் பங்கேற்றுள்ளார். அது சம்பந்தமான வீடியோ, புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார்.
பூஜா அடிக்கடி அவருடைய இந்து மத பக்தியை வெளிப்படுத்தும் விதமாக பதிவுகளையும், புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சில நடிகைகள் தாங்கள் சார்ந்த மதம் பற்றிய பதிவுகளை வெளியிடத் தயங்குவார்கள். ஆனால், பூஜா இதுவரை அப்படி எந்த ஒரு தயக்கத்தையும் காட்டியதில்லை. சாதாரணப் பெண் போல அவருடைய பக்தி சார்ந்த பதிவுகளை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளியிடுவார். இதனால்தான் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்கிறார்கள் டோலிவுட்டில்.