செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சர்தார் படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு கார்த்தி விருமன் படத்தில் நடிப்பதால் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் பிரகாஷ் ராஜ் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே படக்குழுவினர் பேக்கப் செய்துவிட்டு சென்னை கிளம்பியுள்ளனர். இதனால் கார்த்தி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரகாஷ்ராஜ் அவர் கொடுக்கப்பட்ட கால்சீட்டின் படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாதது தான் இதற்கு காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஒரு படத்திலும் பிரகாஷ் ராஜ் நடிக்கவில்லை.எனவே தான் அவருக்கு பதிலாக தான் சமுத்திரகனி இணைந்தார்.
பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கிறது. அவருக்கு எதிராக மோகன் பாபுவின் மகன் நிற்கிறார். இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறத. இந்த தேர்தல் காரணமாகவே பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அக்டோபர் 15 முதல் மீண்டும் விருமன் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் நடிக்க உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.