‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார். இதில் இயக்குனர் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ், கருணாஸ் மற்றும் அவருடைய மகன் கென் கருணாசுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கருணாசும், அவருடைய மகனும் இந்த படத்தில் பணியாற்றுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
கென் கருணாசுக்கு தந்தையாக அசுரன் படத்தில் தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.