ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கமல் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜயசேதுபதி, பகத்பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படம் மிகப்பெரிய கதைக்களத்தில் உருவாகி வருவதால் ஒரே பாகமாக சொன்னால் படத்தின் நீளம் அதிகமாகி விடும் என்பதால் விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் ராஜமவுலியின் பாகுபலி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அல்லு அர்ஜூனின் புஷ்பா பட வரிசையில் கமலின் விக்ரம் படமும் இணையப்போகிறது.