''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட நிலையில் நோய்க்கு பிந்தைய பாதிப்பால் செப்டம்பர் 25ம் தேதி காலமானார். அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவு நாளையொட்டி பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்த சென்றனர். ஆனால் அங்கிருந்த பண்ணை ஆட்கள் பொதுமக்களை உள்ளே விட மறுத்தனர். இந்த நிலையில் எஸ்.பி.பி.சரண் அங்கு வந்து தந்தையின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறியதாவது: கொரோனா சூழலால் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிப்பதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எஸ்.பி.பி ரசிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இங்கு வந்துள்ளோம். கடந்த ஓராண்டாக அவர் இல்லாவிட்டாலும், செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. தெலுங்கில் 22 ஆண்டுகளாக அவர் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடத்தி அப்பாவின் பாடல்களை பாடி வருகிறேன்.
அப்பா அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த இடத்தில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். அதோடு மியூசியம், இசைக்கூடம் கட்ட திட்டமிட்டிருக்கிறேன். இந்த பணிகள் முடிய சில ஆண்டுகள் ஆகலாம். இந்த பணிகளுக்காக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு உதவியும் கேட்கவில்லை. எஸ்.பி.பி அறக்கட்டளை மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை கட்ட தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்றார்.