ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சேகர் கம்முலா இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுக்களும், திரையுலகத்தினர் பலரின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் டாப் ஹீரோவான மகேஷ் பாபு படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பெரிதும் பாராட்டியுள்ளார். சாய் பல்லவி பற்றி, “எப்போதுமே பரபரப்பூட்டுகிறவர் சாய் பல்லவி. இந்தப் பெண்ணிடம் எலும்புகள் இருக்கிறதா ?. திரையில் இதுவரை இவரைப்போன்று வேறு யாரும் நடனமாடிப் பார்த்ததில்லை. அவருடைய அசைவுகள் கனவு போல உள்ளது,” என்று பாராட்டியுள்ளார்.
அதற்கு சாய் பல்லவி, “வாவ்...நான் சுய நினைவுக்கு வர கொஞ்ச நேரம் ஆகும். உங்களது பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி சார். குறிப்பு - எனக்குள் இருக்கும் உங்களின் ரசிகை, இந்த டுவீட்டை மில்லியன் முறை படித்துவிட்டார்,” என மகேஷ்பாபுவின் பாராட்டுக்கு மயங்கி நன்றி தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
அடுத்து தெலுங்கில் சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பர்வம்', 'ஷியாம் சிங்க ராய்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. தமிழ், மலையாளத்தில் விரைவில் புதிய படங்களில் நடிக்க உள்ளார்.