Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ருத்ர தாண்டவத்தில் கிறிஸ்தவ மத அரசியல் : இயக்குனர் விளக்கம்

24 செப், 2021 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Mohanji-about-Rudhrathandavam-movie-and-backdrop-of-religion-change-politics

ஜி. எம். பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மோகன்ஜி தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம். நாடக காதல் தொடர்பான திரௌபதி படத்தை இயக்கி பரபரப்பை கிளப்பியவர் மோகன்ஜி. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று தியேட்டரில் வெளியாகிறது.

படம் பற்றி மோகன்ஜி கூறியதாவது: திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்கங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படமாக இயக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன். ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார்.

அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார், கிறிஸ்தவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார்.

மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.

சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்தவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்தவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ருத்ரதாண்டவம் உருவான கதை. என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சாய்பல்லவியுடன் டூயட் பாட ஆசை: சிரஞ்சீவி, நான் தயார்: சாய்பல்லவிசாய்பல்லவியுடன் டூயட் பாட ஆசை: ... ஜீவனாம்சம் ரூ.50 கோடியாம் ; பரவும் செய்தி - என்ன சொல்கிறார் நாகசைதன்யா ஜீவனாம்சம் ரூ.50 கோடியாம் ; பரவும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vaduvooraan - Chennai ,இந்தியா
01 அக், 2021 - 09:24 Report Abuse
Vaduvooraan படத்தயாரிப்பாளர் இயக்குனர் துணிச்சலை விடவும், படத்தின் கருவை விடவும் படத்தை பார்த்த முக்கிய திரை உலக பிரபலங்கள்- பாக்யராஜ், லட்சுமி ஐஸ்வர்யா போன்றவர்கள் மனந்திறந்து படத்தை பாராட்டி இருப்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
01 அக், 2021 - 09:20 Report Abuse
Vaduvooraan படத்தின் உட்கருத்து பாராட்டப்படவேண்டிய ஒன்று. இந்த துணிச்சலுக்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காரணம் ஹிந்துமதத்தையும் நம்பிக்கைகளையும் இழிவு செய்வதுதான் முற்போக்கு என்ற கரடு தட்டிப்போன கருஞ்சட்டை சித்தாந்தத்துக்கு சவால் விடுகிற மாதிரி ஒருவர் இறங்கி இருக்கிறார் என்றால்..அதுவும் படத்துக்கு மிகச்சரியாக ருத்ர தாண்டவம் என்று பேர் வைத்திருக்கிறார் என்றால் நடுநிலையாளர்கள் என்று யாரவது இருந்தால் அவருக்கு பின்னல் அணி திரண்டு நின்று ஆதரவு தரவேண்டும்
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
01 அக், 2021 - 09:15 Report Abuse
Vaduvooraan ஹூம் காலந்தான் எப்படி மாறிவிட்டது ஒரு 25 வருடங்களுக்கு முன்பு ஒரு முன்னணி நாளேட்டின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இடஒதுக்கீடு பற்றின பிராமணர்கள் கண்ணோட்டத்தை கருவாக வைத்து தமிழில் ஒரு படம் எடுத்தார். அன்றைய முன்னணி நடிகர்கள் நடித்திருந்த அந்தப்படத்தில் யாரையும் குறை சொல்லாமல் "எங்களை ஒதுக்காமல் மற்றவர்களுக்கு கொடுப்பது பொலவே எங்களுக்கும் ஒரு சிறிய சதவிகிதத்தில் இடம் ஒதுக்குங்களேன் என்று ஒரு பிராமணர் கெஞ்சி கதறுவது போல பயந்து பயந்து காட்சி அமைத்திருந்தார்கள். இருந்தாலும் நம்ம கருஞ்சட்டை வீரர்கள் காவல் துறையில் புகார் அளித்து அத்துடன் நிற்காமல் நீதிமன்றத்துக்கும் போய வழக்கு தொடுத்து, போதாததற்கு தங்களது கூலிப்பட்டாளத்தையும் ஏவி விட்டு திரை அரங்குகளில் படம் இரண்டு நாட்களுக்கு மேல் ஓடாமல் பார்த்துக் கொண்டார்கள். ஜனநாயகம், பேச்சுரிமை, சமநீதி, சமூக நீதி என்று குரல் கொடுக்கும் அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள்..ஏன் படத்தை எடுத்த அந்த ஆங்கில நாளேட்டை சேர்ந்தவர்கள் கூட வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததில் அந்த படம் போன இடம் தெரியவில்லை.அதன் பிறகு எந்த திரை அரங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ மீண்டும் வரவில்லை. இப்போதும் சொல்கிறேன் இந்த படத்தை தடை செய்ய ஒட்டு மொத்த கிறித்தவ மத அமைப்புகள் சிலிர்த்துக்கொண்டு போராட்டத்தில் குதிப்பார்கள். சுரணையோ மனசாட்சியோ இல்லாத ஊடக பிரபலங்கள் இது மத்திய அரசின் சதி என்று தொலைக்காட்சி விவாதங்களில் கணடனத்தை தெரிவிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் நிதியில் ஒரு பகுதி கூலிப்படையினருக்கு ஒதுக்கப்பட்டு அவர்கள் சிறுபான்மையினர் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் தெருவுக்கு வந்து போராடுவார்கள். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவார்கள். இதென்னடா பதவிக்கு வந்த ஐந்து மாசத்துக்குள் இப்படி ஒரு சோதனை என்று மாநில அரசு அவர்களை அறிவாலயத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதி படுத்த முயற்சி செய்யும். தேவையில்லாமல் ஹெச் ராஜா அல்லது அண்ணாமலைதான் அத்தனைக்கும் காரணம் என்ற பிரச்சாரம் எழும்
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
30 செப், 2021 - 03:41 Report Abuse
naadodi ரிஷி ரிச்சர்ட், பாருக், ஜூபின் இது ஒன்றே போதும் இப்படம் வெற்றிக்கு. துணிவைப் பாராட்டுகிறோம்.
Rate this:
ravikumark - Chennai,இந்தியா
24 செப், 2021 - 18:19 Report Abuse
ravikumark Hats off to the team for taking up a bold subject. I was thinking how come we don't have the courage in Tamilnadu to make movie like Trance. Hope people will get the correct message and get enlightened
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in