ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
நடிகை சாய்பல்லவி எப்போதுமே வித்தியாசமானவர். தனக்கு பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பார். 5 கோடி ரூபாய் சம்பளத்தில் 6 மாதத்தில் சிவப்பழகாக்கும் கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்தார். நான் ஒரு டாக்டர் எந்த கிரீமாலும் நிறத்தை மாற்ற முடியாது. போலியான விளம்பரத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும் என்று கேட்டார்.
அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார் . தமிழில் அஜித்தின் தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்தார். அந்த வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசினார்கள். ஹீரோயினுக்கான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இப்போது அந்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு சிரஞ்சீவி பேசும்போது, நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை. என்று வேடிக்கையாக கூறினார்.
பின்னர் இதற்கு பதில் அளித்து பேசிய சாய்பல்லவி: ரீமேக் படங்களில் நடிக்க எனக்கு கொஞ்சம் பயம். அதனால் தான் போலா ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்தேன். இல்லை என்றால் உங்களுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிடுவேனா?. நான் எங்கு சென்றாலும் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். ராம் சரணை சந்தித்தபோது, உங்களை எப்பொழுது பார்ப்பேன் என்று எனக்கு நானே கேட்பேன். உங்களுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெருமை சார். நான் எப்போதும் தயார். என்றார்.