இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
‛திரௌபதி, பகாசூரன்' படங்களை இயக்கியவர் மோகன்ஜி. ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்துடன் படங்களைக் கொடுப்பதாக அவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.
செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைப்பார்கள். அந்த இரண்டு படங்களும் வியாபார ரீதியாக வெற்றிப் படங்களாக அமையவில்லை என்றாலும் இன்று வரை பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
கடந்த 2021ல் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க போவதாக செல்வராகவன் அறிவித்தார். அறிவிப்போடு மட்டுமே உள்ள இந்தப்படம் அதன்பின் டேக்-ஆப் ஆகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மோகன்ஜி, “கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள். இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ…” என சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களை சாடியுள்ளார்.
வேறொரு இயக்குனரின் படத்திற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்க அந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மோகன்ஜி கேட்டுள்ளார். அதே சமயம் அவரிடமே ஒரு ரசிகர், “நீங்கள் எப்போது திரௌபதி 2' எடுக்க போறிங்க,” எனக் கேட்டுள்ளார்.
மோகன் ஜி குறிப்பிடுவதை பார்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை என தெரிகிறது.