மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

யதார்த்த நடிகராக அறியப்பட்ட விஜய்சேதுபதியின் சமீபத்திய பெரிய பட்ஜெட் கமர்ஷியல் படங்கள் தோல்வி அடைந்துள்ளது. சமீபத்திய அவர் படங்களில் அவரது நடிப்பு பற்றியும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து விஜய் சேதுபதியை பெயரை குறிப்பிடாமல் டுவிட்டரில் ஒரு மீம்ஸை பகிர்ந்து சீனு ராமசாமி பதிவிட்டுள்ளதாவது : அதீத கற்பனையான, மசாலா படங்களில் மிகை நடிப்பு, மிகை உணர்ச்சி, சுற்றி இருக்கும் சக நடிகர்கள் வெளிப்படுத்துவர். அதில் இயல்பாக யதார்த்தமாக நடிக்க முயன்றால் மிகக் குறைவாக, நடிக்காத மாதிரி தெரியும். கத்துவது, கர்ஜிப்பது, ஆவேசம், ஆக்ரோஷம், சண்டை, பிளிறுவது போன்ற முகபாவங்கள் உச்சம் தேவை. இது தான் யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்கள் என்ற பாப்புலர் சினிமாக்களில் சந்திக்கும் விபத்து. என்று சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.