பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நாகசைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வருகிறது. இந்தநிலையில் இந்தபடம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதற்கு முன்பு சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்த பிடா படத்தில் இருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டது. இது காதல் கதை என்றாலும் மனித உணர்வுகள் சம்பந்தமான விசயங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை நான் நடித்ததில் முற்றிலும் மாறுபட்ட கதை. அதோடு இந்த படத்தின் பாடல் காட்சிகளில் எனக்கு நடனமாட நிறைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தில் எனது நடிப்பைப் போலவே நடனத்தையும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.
மேலும் எனது நடனத்தை சிரஞ்சீவி பாராட்டியது எனக்கு மிகப்பெரிய எனர்ஜியை கொடுத்துள்ளது. நான்ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவர் என்னைப்பற்றி பேசிய விதம் அவரது மகத்துவத்தை காண்பிக்கிறது. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதோடு, ஒரு ஹிந்தி வலைதொடரிலும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.




