இரண்டாவது முறையாக கோவிட் பாதிப்பில் பாலகிருஷ்ணா | கதையை புரிந்து கொள்ளாமல் ஹிட் படத்தை நழுவவிட்டேன் : குஞ்சாக்கோ போபன் | சுரேஷ்கோபி நடிக்கும் ஹைவே 2 : 27 வருடம் கழித்து 2ம் பாகம் | 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' | 30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை' | மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? |
மதயானை கூட்டம் படம் மூலம் அறிமுகமாகி பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனிக்க வைத்தவர் கதிர். விக்ரம் வேதா , பிகில் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கதிர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் கதிருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், கதிருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
கதிருடன் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், ‛‛கதிர் 3.0, பிறந்தநாள் வாழ்த்துக்கள். அற்புதமான ஆண்டாக அமையட்டும் நண்பரே'' என்று குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியான இப்படங்கள் வேகமாக வைரலாகி வருகிறது.
இருவரும் இணைந்து நடித்ததில்லை. ஆனால் கடந்தாண்டு கடற்கரையில் இருவரும் இருக்கும் படங்கள் வெளியானதால் இருவருக்கும் இடையே காதலா என அப்போதே காதல் கிசுகிசு எழுந்தது. இப்போது மீண்டும் அது போன்றதொரு புகைச்சல் சமூகவலைதளங்களில் கிளம்பி வருகிறது.