மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தின் முதல் சிங்கிளான நாங்க வேற மாரி பாடல் கடந்த மாதம் யூடியூபில் வெளியாகி 26 மில்லியன் பார்வைகளைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகும், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆயுத பூஜைக்கு வருமா, தீபாவளிக்கு வருமா என பட வெளியீடு பற்றியும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். நாளை படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதமாக வலிமை பற்றிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். அதன்படி, ‛‛வலிமை படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது என மகிழ்ச்சி உடன் தெரிவிக்கிறேன் என டுவிட்டரில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தீபாவளி போட்டியில் ஏற்கனவே உள்ள ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு படங்கள் உடனான மோதலை தவிர்த்துள்ளனர். அதேசமயம் 2022 பொங்கல் போட்டியில் விஜய்யின் பீஸ்ட் படம் உள்ளது. இதன்மூலம் விஜய், அஜித் படங்கள் மீண்டும் ஒரு முறை மோத தயாராகி வருகின்றன.