மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு 'நாய் சேகர்' என்ற பெயரை பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க சிக்கல் உருவானது.
இந்நிலையில் சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் போஸ்டரை இன்று(செப்., 16) மாலை முந்தி வெளியிட்டனர். படத்திற்கு நாய் சேகர் என தலைப்பிட்டு, ஒரு நாய் உடன் சதீஷ் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
சிவகார்த்திகேயன் இந்த போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு, ‛‛வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள். படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் நாய் சேகர் படத்தின் தலைப்பு சதீஷிற்கு கிடைத்துள்ளது. இதனால் வடிவேலு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அநேகமாக நாய் சேகர் என்ற பெயருடன் ‛‛மீண்டும் நாய் சேகர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்'' போன்ற வார்த்தைகள் இணைப்பட்டு வடிவேலு படத்தின் தலைப்பு வெளியாகலாம் என தெரிகிறது.




