'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? |

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பா, பாகுபலி போன்ற படங்கள் இவரை மிகவும் பிரபலப்படுத்திய படங்கள். இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்த இவர் இப்போது சினிமாவிலும், சின்னத்திரை மற்றும் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பிஸியாக வலம் வருகிறார். 51 வயதை கடந்துவிட்ட ரம்யா கிருஷ்ணன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
![]() |
கணவர் மற்றும் தனது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா, தனது தோழிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்காக தனி பார்ட்டி ஒன்றும் கொடுத்தார். இதில் தமிழ், தெலுங்கில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். குறிப்பாக திரிஷா, குஷ்பு, மதுபாலா, ராதிகா, லிஸி, பிருந்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, உமா ரியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள் பார்ட்டி தொடர்பான போட்டோ, வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
![]() |




