ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கொரோனா இரண்டாவது அலை குறைந்திருந்தாலும், முழுவதுமாக நீங்கவில்லை. சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை, கட்டுப்பாடுகள் என்று தான் சினிமா நிகழ்ச்சிகளும், தியேட்டர்களில் காட்சிகளும் நடந்து வருகின்றன. வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை என்பது கட்டாயம். சராசரி அளவை விட அதிகம் இருந்தால் அவர்களை உள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்பதுதான் கட்டுப்பாடு.
அப்படியிருக்கையில் நேற்று நடைபெற்ற 'நான் கடவுள் இல்லை' டிரைலர், டீசர் விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி ஜுரத்துடன் வந்தது விழாவுக்கு வந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்க, சமுத்திரக்கனி, இனியா மற்றும் பலர் நடிக்கும் படம் 'நான் கடவுள் இல்லை'. நேற்றைய விழா, மாலை 6 மணிக்கு ஆரம்பமாக வேண்டியது, ஆனால், இரவு 7.30 மணிக்குதான் ஆரம்பமானது. விஜய் ஆண்டனிக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் தாமதமாகிவிட்டது என்று சொன்னார்கள்.
வரவேற்புரை நிகழ்த்திய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் பேசும் போது விஜய் ஆண்டனிக்கு 100 டிகிரிக்கும் மேல் ஜுரம். ஆனால், அவர் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உடையவர், அதனால் அவரை வரச் சொன்னேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அவருக்கு ஜுரம் குறைந்துவிடும் என்று பேசினார்.
விஜய் ஆண்டனி ஜுரத்துடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்று எஸ்ஏ சந்திரசேகரன் பேசியதும் விழா மேடையில் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்து மற்ற பிரபலங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்த 'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உடனே அவரிடம் தடுப்பூசி எல்லாம் போட்டுவிட்டீர்களா எனக் கேட்க, விஜய் ஆண்டனி இரண்டு ஊசியும் போட்டுவிட்டதாகச் சொன்னார்.
விஜய் ஆண்டனி இப்படி ஜுரத்துடன் வந்ததை எஸ்ஏ சந்திரசேகரன் பெருமையாகப் பேசியது பத்திரிகையார்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பவர்களை விழா அரங்கத்திற்குளே அனுமதிக்கவே கூடாது. மற்றவர்களின் நலன் கருதி அவரை விழாவுக்கு வர வேண்டாமென எஸ்ஏ சந்திரசேகரனாவது சொல்லியிருக்கலாம், அல்லது விஜய் ஆண்டனியாவது வராமல் தவிர்த்திருக்கலாம்.
இந்தப் படம் சமூகப் பொறுப்புள்ள படம் என்று பேசினார்கள், ஆனால், விழாவில் அப்படி சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லையே ?.