மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை |

கடந்த மாதம் துவங்கிய கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தனது அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் நிறைய உதவிகள் செய்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்று வறுமையில் வாடுவதை அறிந்து, அந்த குடும்பத்திற்கென சொந்தமாகவே பல லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். அவரது இந்த செயல் ரசிகர்களிடம் பெருவாரியாக பாராட்டை பெற்றாலும், ஒரு சிலர் இப்படி ஒரே நபருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்வதற்கு பதிலாக அதை 10 பேருக்கு பிரித்து செய்தால் பத்து குடும்பம் நன்றாக இருக்குமே என்றும் கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது.