ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் தெலுங்கில் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ரஜினியுடன் சிவாஜி, விஜய் உடன் அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ என்ற ரஷ்ய டென்னிஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயா தனது 39வது பிறந்தநாளை கடந்த வாரம் கொண்டாடினார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் வைரலாகின. மேலும் நடிகை ஸ்ரேயா, தன் கணவருடன் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வாசலில் முகத்தை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரேயாவின் கணவர் ஸ்ரேயாவுக்கு கோவில் வாசலில் நின்று முத்தமிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்கு சாமி கும்பிட வரும் போது இந்த மாதிரியெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்வது அவசியமா என்று விமர்சித்தும் வருகிறார்கள். புனித தலமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கோபுரத்தின் முன் முத்தம் கொடுப்பதா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.




