சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‛ரெட்ரோ' என்ற படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நடிகை ஸ்ரேயா, சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் கலந்த காதல் கதையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற காதலர் தினத்தன்று இப்படத்தில் சூர்யாவுடன் ஸ்ரேயா இணைந்து நடனமாடியுள்ள பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த படத்தை அடுத்து ஆர்.ஜே .பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‛ஆறு' படத்திற்கு பிறகு மீண்டும் திரிஷா இணைந்திருக்கிறார்.