இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

கன்னடத்தில் நடிகர் துருவ சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் கேடி : தி டெவில். பிரேம் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பாலிவுட் நடிகையான நோரா பதேகி, சர்கே சுனார் என்கிற ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப்பாடலின் ஹிந்தி வெர்ஷன் பாடல் வரிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி மிகப்பெரிய அளவில் புகார்கள் எழுந்தன. நீதிமன்றமே எப்படி இந்த பாடலை அனுமதித்தீர்கள் என்று சென்சார் போர்டிடம் கேள்வி எழுப்பியதுடன் அனைத்து தளங்களிலும் இருந்து இந்த பாடலை நீக்க உத்தரவிட்டது. அதே சமயம் இத்துடன் பிரச்சனை முடியவில்லை.
இந்த பாடலில் நடித்து தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள் எனக் கூறி பாடலில் நடித்த சஞ்சய் மற்றும் நோரா பதேகி இருவருக்கும் தேசிய பெண்கள் ஆணையம் தற்போது சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 25ம் தேதி இவர்கள் இருவரும் தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.