ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‛ஜனநாயகன்'. அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பதால் இந்த முதல் பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.