சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது 'கிங்ஸ்டன்' எனும் அவரது 25வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜி.வி. பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கமல் மாதிரி தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா எடுப்பார்கள். அவர் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன்.
என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கமல் தான் தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினேன். அதை அவரிடம் சொன்னதும் உடனே கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வாழ்த்தினார். கமலுக்கு என்மீது அன்பும், அக்கறையும் உண்டு. ஒரு போராட்டத்திற்கு நான் குரல் கொடுத்த போது என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ரொம்ப தைரியமாக பண்ணுறீங்க. உங்கள் அரசியல் பார்வை ரொம்ப பிடித்துள்ளது, " என தெரிவித்துள்ளார்.