சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போது நடிப்பவர் தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து பிரிந்தவர் சமந்தா. நாக சைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று வந்தார் சமந்தா.
இயக்குனர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே இருவரும் ராஜ் - டிகே என்ற பெயரில் சில படங்களையும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல் ஹன்னி பன்னி' உள்ளிட்ட வெப் தொடர்களையும் இயக்கியுள்ளார்கள். 'பேமிலி மேன், சிட்டாடல் ஹன்னி பன்னி' ஆகிய தொடர்களில் சமந்தா நடித்துள்ளார். அப்போது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
'பிக்கல்பால்' என்ற புதிய விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'வேர்ல்டு பிக்கல்பால் லீக்' என்ற போட்டியில் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த போட்டிகள் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றன. அப்போது சமந்தா மற்றும் டிகே ஒன்றாக வந்தது அவர்களுக்கிடையிலான காதலைப் பற்றி வெளிப்படுத்துவதாக உள்ளதென பேசப்பட்டுள்ளது.