குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது |
இசையமைப்பாளர் தமன் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். குறிப்பாக இன்றைய இளம் ஹீரோக்களின் படங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து அவர் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்திற்கும் தமன் தான் இசையமைத்திருந்தார். தன்னை அறிமுகப்படுத்திய குருநாதர் ஷங்கரின் படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கிறார் என்கிற எதிர்பார்ப்பும் இந்த படத்திற்கு அதிகம் இருந்தது. அதே சமயம் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற தவறியது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் பாடல்கள் ரிலீஸுக்கு முன்பே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் நேற்று முன்தினம் பிப்ரவரி 1 இந்த படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்தபடி குறிப்பிட்ட நேரத்தில் அவரால் அதை வெளியிட முடியவில்லை. சில காரணங்களால் ஏற்பட்ட தாமதத்திற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள தமன், பிப்ரவரி-2ம் தேதி {நேற்று) 6 மணிக்கு ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை வெளியிட்டார்.